ரமணன் சிவா
ஆசிரியர் - காத்தான்குடி மத்திய கல்லூரி
Search This Blog
Monday, 5 August 2013
Friday, 26 July 2013
Thursday, 18 July 2013
செயல்நிலை ஆய்வு - 2013
அறிமுகம்
செயல்நிலை ஆய்வு என்பது ஒரு பிரச்சினையை இணங்கண்டு தீர்வுக்காக திட்டமிடுதலும் நடைமுறைப்படுத்தலும் அதன் விளைவுகளை அறிதலும் ஆகிய மூன்று படிகளைக் கொண்ட சுழற்சி செயன்முறையாகும்.
தலைப்பு
வவுனியா தரணிக்குளம் கணேஷ் வித்தியாலயத்தின் தரம் 06 மாணவர்களிடத்தில் ஒரு மில்லியனிலும் குறைந்த எண்களை வகை குறிக்கும் ஆற்றலை மேம்படுத்தல்.
ஆய்வாளர் பெயர் :- சிவராசா சிவறமணன்
பாடசாலையின் பெயர் :- வவுனியா தரணிக்குளம் கணேஷ் வித்தியாலயம்
மேற்பார்வை விரிவுரையாளர் :- திரு. கு.கமலகுமார்
கால வரையறை :- இலிருந்து 09.10.2013 வரை
இலக்கு குழு :- தரம் 06 இல் கல்வி கற்கும் 11 மாணவர்கள்
அடிப்படை கருத்துப் பிரச்சினை
வவுனியா தரணிக்குளம் கணேஷ் வித்தியாலய தரம் 06 இல் கல்வி பயிலும் சில மாணவர்களிடத்தே ஒரு மில்லியனிலும் குறைந்த எண்களை இடப்பெறுமான எண்ணக்கருவுக்கு அமைவாக வகைகுறிக்கும் ஆற்றல் குறைவாக காணப்பட்டமையினை என் பிரதிபலிப்பு நாளேட்டின் ஊடாக என்னால் உணரமுடிந்தது. இந்த மாணவர்கள் எண்களை தவறான முறையில் எழுதயமையினையும் எண்ணின் இடப்பெறுமானத்தை இடம்மாற்றி எழுதியமையினையும் நான் அவதானித்தேன். தொடர்ச்சியாக பிண்ணனியை உற்றுநோக்கிய போது சில விடயங்கள் தெளிவாகியது அதாவது
1. ஆரம்ப மட்டத்தில் வழங்கப்பட்ட இடப்பெறுமான அறிவு இவர்களிடத்தே சரியாக சென்றிருக்கவில்லை.
2. கணித பாடம் தொடர்பான வெறுப்புநிலை.
போன்றவை தெளிவாகியது. இந்த நிலைமையினால் வகுப்பறை செயற்பாடுகளை மேற்கொள்வது எனக்கு சிரமமளித்தது. இந்த குறைபாட்டை நிவர்த்தி செய்ய என்னால் மேற்கொள்ளப்பட்ட கற்பித்தல் செயற்பாடுகள் பலனளிக்கவில்லை. எனவே செயற்றொடர் ஆய்வின் ஊடாக இப்பிரச்சினையை சீர் செய்யும் எண்ணம் எனக்கு தோற்றம் பெற்றது.
தலையிடல் 01:
தரம் 06 மாணவர்களுக்கு இடப்பெறுமானம் தொடர்பான அடிப்படை அறிவை விருத்தி செய்தல்.
செயற்பாடு 01:
ஒன்றுக்கள், பத்துக்கள், நூறுகள் ஆகியவை மட்டும் கொண்ட எண்சட்டத்தில் மாணவர்கள் எண்களை வகைகுறிக்க பயிற்சிகளை வழங்குதல்.
படிமுறை 02:
ஒரு மில்லியனிலும் குறைந்த எண்களை எண்சட்டத்தில் வகை குறிக்க பயிற்சியளித்தல்
செயற்பாடு 02:
அலகு வலயம் (1,10,100கள்), ஆயிரம் வலயம் (1000, 10,000, 100,000கள்), மில்லியன் வலயம்(ஒரு மில்லியன் மட்டும்) ஆகியவற்றினை கொண்ட எண்சட்டத்தில் எண்களை வகைகுறிக்க பயிற்சிகளை வழங்குதல்.
ஒரு மில்லியனிலும் குறைந்த எண்களை விளங்கிக்கொள்ள எண்கட்டங்களை உருவாக்கி எண்களை காட்சிப்படுத்தி குறித்த இடப்பெறுமானத்திலுள்ள எண்களையும், குறித்த எண் கொண்டுள்ள இடப்பெறுமானத்தையும், குறித்த எண் கொண்டுள்ள இடப்பெறுமானத்தையும் அறியும் திறனை மாணவர்களிடத்தே விருத்தி செய்தல்.
செயல் நிலை ஆய்வுச் செயற்பாடுகள்
முற்சோதனை மேற்கொள்ளப்பட்டமை - 06.06.2013
தலையிடல் 01 மேற்கொள்ளப்பட்டமை - 14.06.2013
தரம் 06 மாணவர்களுக்கு இடப்பெறுமானம் தொடர்பான அடிப்படை அறிவை விருத்தி செய்தல்.
செயல்நிலை ஆய்வு என்பது ஒரு பிரச்சினையை இணங்கண்டு தீர்வுக்காக திட்டமிடுதலும் நடைமுறைப்படுத்தலும் அதன் விளைவுகளை அறிதலும் ஆகிய மூன்று படிகளைக் கொண்ட சுழற்சி செயன்முறையாகும்.
தலைப்பு
வவுனியா தரணிக்குளம் கணேஷ் வித்தியாலயத்தின் தரம் 06 மாணவர்களிடத்தில் ஒரு மில்லியனிலும் குறைந்த எண்களை வகை குறிக்கும் ஆற்றலை மேம்படுத்தல்.
ஆய்வாளர் பெயர் :- சிவராசா சிவறமணன்
பாடசாலையின் பெயர் :- வவுனியா தரணிக்குளம் கணேஷ் வித்தியாலயம்
மேற்பார்வை விரிவுரையாளர் :- திரு. கு.கமலகுமார்
கால வரையறை :- இலிருந்து 09.10.2013 வரை
இலக்கு குழு :- தரம் 06 இல் கல்வி கற்கும் 11 மாணவர்கள்
அடிப்படை கருத்துப் பிரச்சினை
வவுனியா தரணிக்குளம் கணேஷ் வித்தியாலய தரம் 06 இல் கல்வி பயிலும் சில மாணவர்களிடத்தே ஒரு மில்லியனிலும் குறைந்த எண்களை இடப்பெறுமான எண்ணக்கருவுக்கு அமைவாக வகைகுறிக்கும் ஆற்றல் குறைவாக காணப்பட்டமையினை என் பிரதிபலிப்பு நாளேட்டின் ஊடாக என்னால் உணரமுடிந்தது. இந்த மாணவர்கள் எண்களை தவறான முறையில் எழுதயமையினையும் எண்ணின் இடப்பெறுமானத்தை இடம்மாற்றி எழுதியமையினையும் நான் அவதானித்தேன். தொடர்ச்சியாக பிண்ணனியை உற்றுநோக்கிய போது சில விடயங்கள் தெளிவாகியது அதாவது
1. ஆரம்ப மட்டத்தில் வழங்கப்பட்ட இடப்பெறுமான அறிவு இவர்களிடத்தே சரியாக சென்றிருக்கவில்லை.
2. கணித பாடம் தொடர்பான வெறுப்புநிலை.
போன்றவை தெளிவாகியது. இந்த நிலைமையினால் வகுப்பறை செயற்பாடுகளை மேற்கொள்வது எனக்கு சிரமமளித்தது. இந்த குறைபாட்டை நிவர்த்தி செய்ய என்னால் மேற்கொள்ளப்பட்ட கற்பித்தல் செயற்பாடுகள் பலனளிக்கவில்லை. எனவே செயற்றொடர் ஆய்வின் ஊடாக இப்பிரச்சினையை சீர் செய்யும் எண்ணம் எனக்கு தோற்றம் பெற்றது.
பிரச்சினையைப் பகுத்தாராய்வதற்காக விடயங்களைத் தேடியறியும் விதம்
பிரதிபலிப்புக் குறிப்பேடு
மாணவர் முன்னேற்றப்பதிவேடு
பயிற்சிக் கொப்பிகள்
அவதானிப்புப் படிவம்
கணிப்பீட்டுப் புள்ளிகள்
தவணைப் பரீட்சைப் புள்ளிகள்
இணைப்பாடவிதான செயற்பாடுகள்.
தலையிடுவதற்காக பயன்படுத்தும் செயற்படுத்தும் திட்டம்
தலையிடல் 01:
தரம் 06 மாணவர்களுக்கு இடப்பெறுமானம் தொடர்பான அடிப்படை அறிவை விருத்தி செய்தல்.
படிமுறை 01:
100 இலும் குறைந்த எண்களை எண்சட்டத்தில் வகை குறிக்க பயிற்சியளித்தல்
ஒன்றுக்கள், பத்துக்கள், நூறுகள் ஆகியவை மட்டும் கொண்ட எண்சட்டத்தில் மாணவர்கள் எண்களை வகைகுறிக்க பயிற்சிகளை வழங்குதல்.
தகவல் சேகரித்த விதம்:
புகைப்படம் எடுத்தல்
நேரடி அவதானிப்பு
பிரதிபலிப்பு குறிப்பேடுட்டில் பதிவுசெய்தல்.
ஒரு மில்லியனிலும் குறைந்த எண்களை எண்சட்டத்தில் வகை குறிக்க பயிற்சியளித்தல்
செயற்பாடு 02:
அலகு வலயம் (1,10,100கள்), ஆயிரம் வலயம் (1000, 10,000, 100,000கள்), மில்லியன் வலயம்(ஒரு மில்லியன் மட்டும்) ஆகியவற்றினை கொண்ட எண்சட்டத்தில் எண்களை வகைகுறிக்க பயிற்சிகளை வழங்குதல்.
தலையிடல் 02:
தரம் 06 மாணவர்களின் இடப்பெறுமான அறிவை மேலும் விருத்தி செய்ய கணித விளையாட்டுக்களை நடைமுறைப்படுத்துதல்.
தரம் 06 மாணவர்களின் இடப்பெறுமான அறிவை மேலும் விருத்தி செய்ய கணித விளையாட்டுக்களை நடைமுறைப்படுத்துதல்.
படிமுறை 01:
100 இலும் குறைந்த எண்களை விளங்கிக்கொள்ள விளையாட்டு மூலமான பயிற்சி வழங்கல்.
செயற்பாடு 01:
100 இலும் குறைந்த எண்களை விளங்கிக்கொள்ள எண்கட்டங்களை உருவாக்கி எண்களை காட்சிப்படுத்தி குறித்த இடப்பெறுமானத்திலுள்ள எண்களையும், குறித்த எண் கொண்டுள்ள இடப்பெறுமானத்தையும், குறித்த எண் கொண்டுள்ள இடப்பெறுமானத்தையும் அறியும் திறனை மாணவர்களிடத்தே விருத்தி செய்தல்.
செயற்பாடு 02:
தலையிடல் 03:
தரம் 06 மாணவர்களின் இடப்பெறுமான அறிவு மேம்பாட்டுக்கு டீன்ஸ் குற்றிகளை பயன்படுத்துதல்.
படிமுறை 01:
ஒன்றுக்கள், பத்துக்கள், நுறுகள், ஆயிரங்கள் ஆகிய எண்களை டீன்ஸ் குற்றிகளை பயன்படுத்தி வகைகுறிக்க பயிற்சியளித்தல்.
செயற்பாடு 01:
ஒரு டீன்ஸ் குற்றியினை ஒன்று எனவும் பத்து குற்றிகள் சேர்ந்தால் ஒரு கோல் உருவாகும் எனவும் (10), பத்து கோல்கள் சேர்ந்தால் ஒரு தட்டு உருவாகும் எனவும் (100) பத்து தட்டுக்கள் சேர்ந்தால் ஒரு கனவுரு உருவாகும் எனவும் (1000) எண்களை வகைகுறிக்க பயிற்சியளித்தல்.
படிமுறை 02:
பத்தாயிரம், நூறாயிரம், ஒரு மில்லியன் ஆகிய எண்களை டீன்ஸ் குற்றிகளை பயன்படுத்தி வகைகுறிக்க பயிற்சியளித்தல்.
செயற்பாடு 02:
டீன்ஸ் குற்றியில் ஒரு குற்றி 1000 எனவும், ஒரு கோல் 10,000 எனவும், ஒரு தட்டினை 100,000 எனவும், ஒரு மில்லியனை ஒரு கனவுரு எனவும் பாவனை செய்து ஆயிரம் தொடக்கம் ஒரு மில்லியனிலும் குறைந்த எண்களை வகைகுறிக்க பயிற்சியளித்தல்.
எதிர்பார்க்கப்படும் வெளிப்பாடுகள்
- மாணவர்கள் எண்விளக்க அறிவை கொண்டிருப்பர்.
- ஒரு மில்லியனிலும் குறைந்த எண்களை ஆக்கி வாசிப்பார்.
- டீன்ஸ் உபகரணத்தில் எண்களை வகைகுறிப்பார்.
- எண்சட்டத்தில் எண்களை வகைகுறிப்பார்.
- கணிதம் தொடர்பான ஆர்வத்தினை கொண்டிருப்பார்.
- மாணவர்கள் தாமாக முன்வந்து எண்களின் இடப்பெறுமான முறைகளை இணங்காண்பார்.
உசாத்துணைகள்
- ஜெயகாண்டீபன்.தி. (2011), கல்விப் புள்ளிவிபரவியல், ஜி.எச் பிறின்றேர்ஸ், குருமண்காடு, வவுனியா, இலங்கை.
- தேசிய கல்வி நிறுவகம் (2007), ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி (கணிதம் தரம் -06), கணித திணைக்களம், மகரகம, இலங்கை.
- முத்துலிங்கம்.ச. (2002), கல்வியும் உளவியலும், லங்கா புத்தகசாலை, குணசிங்கபுர, கொழும்பு 12, இலங்கை.
- சுவர்ணராஜா.க., சின்னத்தம்பி.க (2007), அறிகைத் தொழிற்பாடும் ஆசிரியரும், குருவெளியீடு, குருமன்காடு, வவுனியா, இலங்கை.
- கல்வி வெளியீட்டுத் திணைக்களம், (2012), தரம் 06 கணிதம், ரத்ன அச்சகம், அத்துருகிரிய, இலங்கை.
வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி, வவுனியா.
உங்கள் கருத்துக்களுக்கு...........
www.ramanansiva15@gmail.com
www.ramanansiva15.blogspot.com
செயல் நிலை ஆய்வுச் செயற்பாடுகள்
முற்சோதனை மேற்கொள்ளப்பட்டமை - 06.06.2013
தலையிடல் 01 மேற்கொள்ளப்பட்டமை - 14.06.2013
தரம் 06 மாணவர்களுக்கு இடப்பெறுமானம் தொடர்பான அடிப்படை அறிவை விருத்தி செய்தல்.
Sunday, 14 July 2013
கணிதத்தில் கூட்டலில் தமிழ்ச் சொற்கள்
தமிழில் ஒன்று,இரண்டு,மூன்று...என்று எண்ணுகிறோம்.பத்து பத்தாக எண்ணும் போது எண்பதுக்கு அடுத்து ஒன்பது என்று வராமல் ஏன் தொண்ணூறு என்று வருகிறது?நூறு நூறாக எண்ணும் போது எண்ணூறுக்கு அடுத்து தொண்ணூறு வராமல் தொள்ளாயிரம் என்று ஏன் வருகிறது?ஆயிரம் ஆயிரமாக எண்ணும் போது எட்டாயிரத்துக்கு அடுத்து தொள்ளாயிரம் என்று வராமல் ஒன்பதாயிரம் என்று ஏன் வருகிறது.பத்தாயிரம் பத்தாயிரமாக எண்ணும் போது எண்பதாயிரம் அடுத்து ஒன்பதாயிரம் என்று வராமல் ஏன் தொண்ணூறாயிரம் என்று வருகிறது.ஒன்று ஒன்றாக எண்ணும் போது எட்டுக்க
பெருக்கலை சுலபமாகக் கையாளுதல் (Tackling Multiplication)
இந்த பாடத்தில் கட்டங்கள் அமைப்பு (Lattice Method) முறையின்படி பெருக்கல் கற்றுத்தரப்படும். கட்டங்கள் வரைந்து பெருக்கல் வழி என்பது பெரிய எண்களை ஒரு சட்டத்திற்குள் கட்டங்கள் வரைந்து பெருக்கலைச் செய்யும் ஒரு எளிமையான முறை ஆகும்.
பெருக்கலை சுலபமாகக் கையாளுதல் (Tackling Multiplication)
பத்துக்களும் ஒன்றுகளும் (Tens and Ones)
பலவகையான எண்களைப் பற்றிய கருத்துகளை கற்க உருவாக்கப்பட்டு வகுப்புகளில் மிகவும் வெற்றிகரமாகப் பயன்படுத்தபட்ட பாடங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் தாங்கள் எப்போதும் கற்பிக்கும் பயிற்சிகளை எளிமையாக உருவாக்க இந்தப் பாடங்கள் உதவிகரமாக இருப்பதை உணருவார்கள். ஏனென்றால், இந்த பயிற்சிகளுக்கு தேவையான பொருட்கள் எல்லாம் எளிதில் கிடைப்பனவாகவும், அதை நிர்வகிப்பதும் எளிதாகவும் இருக்கும்.
பத்துக்களும் ஒன்றுகளும் (Tens and Ones)
எண்களில் பலவகைகள் உண்டு. அவைகளின் கலைச் சொற்களை (Terminalogy) அறிந்து கொள்வது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அந்த சொற்களின் பெயர்கள் மற்றும் அவைகள் குறிக்கும் எண்கள் ஆகியவைகளைப் பற்றிய தெளிவான கருத்துக்கள் மனதில் பதிய வேண்டியது மிக அவசியமான அடிப்படைத் தேவையாகும்.
எண்களின் வகைகள்:
பேப்பரை மடிப்போம் - பின்னம் கற்போம்
பின்னம் என்றால் பொதுவாக 1-என்ற எண்ணின் மதிப்பிற்கும் கீழே உள்ள எண்கள் என்ற கருத்து மனதில் எழுவது சகஜம். ஆனால், தனிப்பட்ட பின்ன எண் 1-க்கும் கீழான மதிப்புக் கொண்டு தகு பின்னமாக இருப்பினும், அவை முழு எண்ணுடன் தொடர்பு கொண்டு தொகுதி எண், பகுதி எண்ணை விட மதிப்பு அதிகமாக இருக்கும் தகா பின்னமாக இருப்பினும் அவையும் பின்னமாகும்.
எந்த வகையான இரண்டு பின்னங்களையும் - கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் - ஆகியவைகள் கணிதத்தில் சிறிது கடினமான கட்டமாகும். அதிலும் வகுத்தல் இன்னும் கடினமாகும்.
Friday, 5 July 2013
சமூகத்தில் சாரணிய இயக்கத்தின் பங்கு
இயக்கம் என்றால் மக்கள் மத்தியில் ஒரு பீதி சாரணிய இயக்கத்திற்கு மகன் செல்லப் போகின்றான் என்பதாகும். இயக்கம் என்றால் மக்களை பேசா மடந்தையாக்கும் ஆயுத கோஷ்டி என்று மக்கள் எண்ணுகிறார்கள்.
ஆனால் சாரணியம் என்றால் முற்றிலும் வேறுபட்டது. இந்நாட்டில் நல்ல பிரஜைகளை உருவாக்கும் ஒரு அமைப்பே சாரணியமாகும். அதாவது எமது நாட்டு சிறுவர்களையும்ää இளைஞர்களையும் உள்வாங்கி எமது நாட்டின் எதிர்காலத்தை ஒரு தைரியமிக்க ஒரு நல்ல நாடாக மாற்றுவதற்கு அமைக்கப்பட்ட ஒரு அமைப்பே சாரணியம் ஆகும்.
ஒரு சாரணன் உண்மையாக தன்னை சாரணியம் எனும் அமைப்பினுள் உள்வாங்குகின்றானோ அன்றே எமது நாட்டிற்கு ஒரு நல்ல பிரஜையாக உருவாக்கப்படுகின்றான்.
சாரணியர்களுக்கான தேசிய ஜம்போறிää பாசறைகள் போன்றன இடம்பெறுகின்றன. இந் நிகழ்வுகளிலே சாரணர்களுக்கிடையேயான ஒற்றுமை கட்டியெழுப்பப்படுகின்றன. அதாவது பிறருக்கு உதவும்ää ஒத்துழைக்கும் மனப்பாங்கு காணப்படுகின்றது.
சாரணன் ஒருவன் சமுதாயத்தில் அநீதிகளை தட்டிக்கேட்பவனாக இருக்க வேண்டும் என்பதே அவனது இலக்காகும். மற்றும் தனது சமூகத்தில் நடக்கும் பிரச்சினைகளை பக்கம் சாராமல் தீர்த்து வைக்கக்கூடிய ஒரு பெருமகனாக மாற வேண்டும்.
சாரணியமானது மானிடர்களை நல்வழிப்படுத்த வேண்டும். எனவே ஒரு சாரணன் தீய எதையும் மனதில் நினைக்காமல் நல்லதை நினைத்துää நல்லதைப் பேசிää நல்லதையே செய்து எமது சமூகத்தை சீர்படுத்த வேண்டும். இதன் மூலம் ஒரு சாரணன் சொல்ää செயல்ää சிந்தனைகளில் தூய்மையானவன் என்பதை நிரூபிக்கமுடியும்.
மேலும் எமது நாட்டில் கடந்த காலங்களில் ஏற்பட்ட யுத்தம்ää இயற்கை அழிவுகளினால் பாதிப்படைந்தோர் தொகை அதிகமாகும். இதிலும் பெரும் பாதிப்புக்குள்ளாகிய சிறுவர்களுக்கும்ää இளைஞர்களுக்கும் அந்த சம்பவங்கள் இப்போதும் அவர்களின் மனங்களில் உள்ளன வடுவாய் காணப்படுகின்றது. அவற்றையெல்லாம் துடைத்தெறிந்து நமது சாரணர்கள் வீரம் செறிந்தவர்கள் என சமுதாயத்திற்கு காட்டுதல் வேண்டும்.
மேலும் சாரணியர்களுக்கும் சமுதாயத்திற்கும் நெருங்கிய தொடர்பு வலுப்படுத்தப்படுவது சாரணர் சேவைகள் மற்றும் மக்கள் தொடர்பு வாரங்களிலாகும். இவை நாடளாவிய ரீதியல் இடம்பெறுவதனை நாம் காணக்கூடும் இவ்வாண்டும் இவை கடந்த 08.06.2013 தொடக்கம் 22.06.2013 வரை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இங்கு ஒவ்வொரு சாரணனும் சமுதாயத்தில் நலன்புரி நடவடிக்கைகள் ஊடாக நல்ல ஆளிடைத் தொடர்புகளினை சமுதாயத்தோடு பேணி வருகின்றான். இங்கு ஊக்குவிப்புத் தொகைகள் வழங்கப்படும். இவை இலங்கை சாரணிய சங்கத்தினால் உருவாக்கப்பட்ட அட்டைகளில் பதிவு செய்யப்பட்டு வழங்கப்படும். எனவே ஒரு சாரணியருக்கும் சமுதாயமும் சழுதாயத்திற்கு சாரணியரும் என்ற பரஸ்பர தொடர்பின் அடிப்படையில் சாரணியம் இயங்குகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
எனவே இன்றைய சிறுவர்களையும்ää இளைஞர்களையும் வலுவுடையதாக மாற்றியமைக்கும் சாரணியச் செயற்பாடுகளில் பங்குபற்றி நல்ல ஒரு பொருத்தப்பாடுடைய சமுதாயத்தின உருவாக்குவோம்.
Subscribe to:
Posts (Atom)