இயக்கம் என்றால் மக்கள் மத்தியில் ஒரு பீதி சாரணிய இயக்கத்திற்கு மகன் செல்லப் போகின்றான் என்பதாகும். இயக்கம் என்றால் மக்களை பேசா மடந்தையாக்கும் ஆயுத கோஷ்டி என்று மக்கள் எண்ணுகிறார்கள்.
ஆனால் சாரணியம் என்றால் முற்றிலும் வேறுபட்டது. இந்நாட்டில் நல்ல பிரஜைகளை உருவாக்கும் ஒரு அமைப்பே சாரணியமாகும். அதாவது எமது நாட்டு சிறுவர்களையும்ää இளைஞர்களையும் உள்வாங்கி எமது நாட்டின் எதிர்காலத்தை ஒரு தைரியமிக்க ஒரு நல்ல நாடாக மாற்றுவதற்கு அமைக்கப்பட்ட ஒரு அமைப்பே சாரணியம் ஆகும்.
ஒரு சாரணன் உண்மையாக தன்னை சாரணியம் எனும் அமைப்பினுள் உள்வாங்குகின்றானோ அன்றே எமது நாட்டிற்கு ஒரு நல்ல பிரஜையாக உருவாக்கப்படுகின்றான்.
சாரணியர்களுக்கான தேசிய ஜம்போறிää பாசறைகள் போன்றன இடம்பெறுகின்றன. இந் நிகழ்வுகளிலே சாரணர்களுக்கிடையேயான ஒற்றுமை கட்டியெழுப்பப்படுகின்றன. அதாவது பிறருக்கு உதவும்ää ஒத்துழைக்கும் மனப்பாங்கு காணப்படுகின்றது.
சாரணன் ஒருவன் சமுதாயத்தில் அநீதிகளை தட்டிக்கேட்பவனாக இருக்க வேண்டும் என்பதே அவனது இலக்காகும். மற்றும் தனது சமூகத்தில் நடக்கும் பிரச்சினைகளை பக்கம் சாராமல் தீர்த்து வைக்கக்கூடிய ஒரு பெருமகனாக மாற வேண்டும்.
சாரணியமானது மானிடர்களை நல்வழிப்படுத்த வேண்டும். எனவே ஒரு சாரணன் தீய எதையும் மனதில் நினைக்காமல் நல்லதை நினைத்துää நல்லதைப் பேசிää நல்லதையே செய்து எமது சமூகத்தை சீர்படுத்த வேண்டும். இதன் மூலம் ஒரு சாரணன் சொல்ää செயல்ää சிந்தனைகளில் தூய்மையானவன் என்பதை நிரூபிக்கமுடியும்.
மேலும் எமது நாட்டில் கடந்த காலங்களில் ஏற்பட்ட யுத்தம்ää இயற்கை அழிவுகளினால் பாதிப்படைந்தோர் தொகை அதிகமாகும். இதிலும் பெரும் பாதிப்புக்குள்ளாகிய சிறுவர்களுக்கும்ää இளைஞர்களுக்கும் அந்த சம்பவங்கள் இப்போதும் அவர்களின் மனங்களில் உள்ளன வடுவாய் காணப்படுகின்றது. அவற்றையெல்லாம் துடைத்தெறிந்து நமது சாரணர்கள் வீரம் செறிந்தவர்கள் என சமுதாயத்திற்கு காட்டுதல் வேண்டும்.
மேலும் சாரணியர்களுக்கும் சமுதாயத்திற்கும் நெருங்கிய தொடர்பு வலுப்படுத்தப்படுவது சாரணர் சேவைகள் மற்றும் மக்கள் தொடர்பு வாரங்களிலாகும். இவை நாடளாவிய ரீதியல் இடம்பெறுவதனை நாம் காணக்கூடும் இவ்வாண்டும் இவை கடந்த 08.06.2013 தொடக்கம் 22.06.2013 வரை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இங்கு ஒவ்வொரு சாரணனும் சமுதாயத்தில் நலன்புரி நடவடிக்கைகள் ஊடாக நல்ல ஆளிடைத் தொடர்புகளினை சமுதாயத்தோடு பேணி வருகின்றான். இங்கு ஊக்குவிப்புத் தொகைகள் வழங்கப்படும். இவை இலங்கை சாரணிய சங்கத்தினால் உருவாக்கப்பட்ட அட்டைகளில் பதிவு செய்யப்பட்டு வழங்கப்படும். எனவே ஒரு சாரணியருக்கும் சமுதாயமும் சழுதாயத்திற்கு சாரணியரும் என்ற பரஸ்பர தொடர்பின் அடிப்படையில் சாரணியம் இயங்குகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
எனவே இன்றைய சிறுவர்களையும்ää இளைஞர்களையும் வலுவுடையதாக மாற்றியமைக்கும் சாரணியச் செயற்பாடுகளில் பங்குபற்றி நல்ல ஒரு பொருத்தப்பாடுடைய சமுதாயத்தின உருவாக்குவோம்.
No comments:
Post a Comment