Search This Blog

Thursday, 18 July 2013

செயல்நிலை ஆய்வு - 2013

அறிமுகம்


செயல்நிலை ஆய்வு என்பது ஒரு பிரச்சினையை இணங்கண்டு தீர்வுக்காக திட்டமிடுதலும் நடைமுறைப்படுத்தலும் அதன் விளைவுகளை அறிதலும் ஆகிய மூன்று படிகளைக் கொண்ட சுழற்சி செயன்முறையாகும்.












தலைப்பு

வவுனியா  தரணிக்குளம் கணேஷ் வித்தியாலயத்தின் தரம் 06 மாணவர்களிடத்தில் ஒரு மில்லியனிலும் குறைந்த எண்களை வகை குறிக்கும் ஆற்றலை மேம்படுத்தல்.

ஆய்வாளர் பெயர்                  :-   சிவராசா சிவறமணன்
பாடசாலையின் பெயர்          :-   வவுனியா தரணிக்குளம் கணேஷ்                                                                                              வித்தியாலயம்
மேற்பார்வை விரிவுரையாளர்  :-   திரு. கு.கமலகுமார்

கால வரையறை                                 :-  இலிருந்து 09.10.2013 வரை

இலக்கு குழு             :- தரம் 06 இல் கல்வி கற்கும் 11 மாணவர்கள்


அடிப்படை கருத்துப் பிரச்சினை

    வவுனியா தரணிக்குளம் கணேஷ் வித்தியாலய தரம் 06 இல் கல்வி பயிலும் சில மாணவர்களிடத்தே ஒரு மில்லியனிலும் குறைந்த எண்களை இடப்பெறுமான எண்ணக்கருவுக்கு அமைவாக வகைகுறிக்கும் ஆற்றல் குறைவாக காணப்பட்டமையினை என் பிரதிபலிப்பு நாளேட்டின் ஊடாக என்னால் உணரமுடிந்தது. இந்த மாணவர்கள் எண்களை தவறான முறையில் எழுதயமையினையும் எண்ணின் இடப்பெறுமானத்தை இடம்மாற்றி எழுதியமையினையும் நான் அவதானித்தேன். தொடர்ச்சியாக பிண்ணனியை உற்றுநோக்கிய போது சில விடயங்கள் தெளிவாகியது அதாவது

1. ஆரம்ப மட்டத்தில் வழங்கப்பட்ட இடப்பெறுமான அறிவு   இவர்களிடத்தே சரியாக சென்றிருக்கவில்லை.


2. கணித பாடம் தொடர்பான வெறுப்புநிலை.


போன்றவை தெளிவாகியது. இந்த நிலைமையினால் வகுப்பறை செயற்பாடுகளை மேற்கொள்வது எனக்கு சிரமமளித்தது. இந்த குறைபாட்டை நிவர்த்தி செய்ய என்னால் மேற்கொள்ளப்பட்ட கற்பித்தல் செயற்பாடுகள் பலனளிக்கவில்லை. எனவே செயற்றொடர் ஆய்வின் ஊடாக இப்பிரச்சினையை சீர் செய்யும் எண்ணம் எனக்கு தோற்றம் பெற்றது.

பிரச்சினையைப் பகுத்தாராய்வதற்காக விடயங்களைத் தேடியறியும் விதம்

பிரதிபலிப்புக் குறிப்பேடு 
மாணவர் முன்னேற்றப்பதிவேடு 
பயிற்சிக் கொப்பிகள்
அவதானிப்புப் படிவம் 
கணிப்பீட்டுப் புள்ளிகள்
தவணைப் பரீட்சைப் புள்ளிகள்
இணைப்பாடவிதான செயற்பாடுகள்.

தலையிடுவதற்காக பயன்படுத்தும் செயற்படுத்தும் திட்டம்


தலையிடல் 01: 

தரம் 06 மாணவர்களுக்கு இடப்பெறுமானம் தொடர்பான அடிப்படை அறிவை விருத்தி செய்தல்.

படிமுறை 01: 

100 இலும் குறைந்த எண்களை எண்சட்டத்தில் வகை குறிக்க பயிற்சியளித்தல்


செயற்பாடு 01: 

ஒன்றுக்கள், பத்துக்கள், நூறுகள் ஆகியவை மட்டும் கொண்ட எண்சட்டத்தில் மாணவர்கள் எண்களை வகைகுறிக்க பயிற்சிகளை வழங்குதல்.

தகவல் சேகரித்த விதம்: 

புகைப்படம் எடுத்தல்
நேரடி அவதானிப்பு
பிரதிபலிப்பு குறிப்பேடுட்டில் பதிவுசெய்தல்.


படிமுறை 02: 

ஒரு மில்லியனிலும் குறைந்த எண்களை எண்சட்டத்தில் வகை குறிக்க பயிற்சியளித்தல்

செயற்பாடு 02: 

அலகு வலயம் (1,10,100கள்), ஆயிரம் வலயம் (1000, 10,000, 100,000கள்), மில்லியன் வலயம்(ஒரு மில்லியன் மட்டும்) ஆகியவற்றினை கொண்ட எண்சட்டத்தில் எண்களை வகைகுறிக்க பயிற்சிகளை வழங்குதல்.




தலையிடல் 02: 

தரம் 06 மாணவர்களின் இடப்பெறுமான அறிவை மேலும் விருத்தி செய்ய கணித விளையாட்டுக்களை நடைமுறைப்படுத்துதல்.

படிமுறை 01: 

100 இலும் குறைந்த எண்களை விளங்கிக்கொள்ள விளையாட்டு மூலமான பயிற்சி வழங்கல்.

செயற்பாடு 01:
100 இலும் குறைந்த எண்களை விளங்கிக்கொள்ள எண்கட்டங்களை உருவாக்கி எண்களை காட்சிப்படுத்தி குறித்த இடப்பெறுமானத்திலுள்ள எண்களையும், குறித்த எண் கொண்டுள்ள இடப்பெறுமானத்தையும், குறித்த எண் கொண்டுள்ள இடப்பெறுமானத்தையும் அறியும் திறனை மாணவர்களிடத்தே விருத்தி செய்தல்.

படிமுறை 02: 

ஒரு மில்லியனிலும் குறைந்த எண்களை விளங்கிக்கொள்ள விளையாட்டு மூலமான பயிற்சி வழங்கல்.

செயற்பாடு 02: 

ஒரு மில்லியனிலும் குறைந்த எண்களை விளங்கிக்கொள்ள எண்கட்டங்களை உருவாக்கி எண்களை காட்சிப்படுத்தி குறித்த இடப்பெறுமானத்திலுள்ள எண்களையும், குறித்த எண் கொண்டுள்ள இடப்பெறுமானத்தையும், குறித்த எண் கொண்டுள்ள இடப்பெறுமானத்தையும் அறியும் திறனை மாணவர்களிடத்தே விருத்தி செய்தல்.

தலையிடல் 03: 

தரம் 06 மாணவர்களின் இடப்பெறுமான அறிவு மேம்பாட்டுக்கு டீன்ஸ் குற்றிகளை பயன்படுத்துதல்.
படிமுறை 01: 

ஒன்றுக்கள், பத்துக்கள், நுறுகள், ஆயிரங்கள் ஆகிய எண்களை டீன்ஸ் குற்றிகளை பயன்படுத்தி வகைகுறிக்க பயிற்சியளித்தல்.

செயற்பாடு 01: 

ஒரு டீன்ஸ் குற்றியினை ஒன்று எனவும் பத்து குற்றிகள் சேர்ந்தால் ஒரு கோல் உருவாகும் எனவும் (10), பத்து கோல்கள் சேர்ந்தால் ஒரு தட்டு உருவாகும் எனவும் (100) பத்து தட்டுக்கள் சேர்ந்தால் ஒரு கனவுரு உருவாகும் எனவும் (1000) எண்களை வகைகுறிக்க பயிற்சியளித்தல்.
படிமுறை 02: 

பத்தாயிரம், நூறாயிரம், ஒரு மில்லியன் ஆகிய எண்களை டீன்ஸ் குற்றிகளை பயன்படுத்தி வகைகுறிக்க பயிற்சியளித்தல்.

செயற்பாடு 02: 

டீன்ஸ் குற்றியில் ஒரு குற்றி 1000 எனவும், ஒரு கோல் 10,000 எனவும், ஒரு தட்டினை 100,000 எனவும், ஒரு மில்லியனை ஒரு கனவுரு எனவும் பாவனை செய்து ஆயிரம் தொடக்கம் ஒரு மில்லியனிலும் குறைந்த எண்களை வகைகுறிக்க பயிற்சியளித்தல்.

எதிர்பார்க்கப்படும் வெளிப்பாடுகள்  

  • மாணவர்கள் எண்விளக்க அறிவை கொண்டிருப்பர்.
  • ஒரு மில்லியனிலும் குறைந்த எண்களை ஆக்கி வாசிப்பார்.
  • டீன்ஸ் உபகரணத்தில் எண்களை வகைகுறிப்பார்.
  • எண்சட்டத்தில் எண்களை வகைகுறிப்பார்.
  • கணிதம் தொடர்பான ஆர்வத்தினை கொண்டிருப்பார்.
  • மாணவர்கள் தாமாக முன்வந்து எண்களின் இடப்பெறுமான முறைகளை இணங்காண்பார்.

உசாத்துணைகள்  

  • ஜெயகாண்டீபன்.தி. (2011), கல்விப் புள்ளிவிபரவியல், ஜி.எச்  பிறின்றேர்ஸ், குருமண்காடு, வவுனியா, இலங்கை.
  • தேசிய கல்வி நிறுவகம் (2007), ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி  (கணிதம் தரம் -06), கணித திணைக்களம், மகரகம, இலங்கை.
  • முத்துலிங்கம்.ச. (2002), கல்வியும் உளவியலும், லங்கா புத்தகசாலை, குணசிங்கபுர, கொழும்பு 12, இலங்கை.
  • சுவர்ணராஜா.க., சின்னத்தம்பி.க (2007), அறிகைத் தொழிற்பாடும் ஆசிரியரும், குருவெளியீடு, குருமன்காடு, வவுனியா, இலங்கை.
  • கல்வி வெளியீட்டுத் திணைக்களம், (2012), தரம் 06 கணிதம், ரத்ன அச்சகம், அத்துருகிரிய, இலங்கை.

நன்றி
ஆய்வாளர் சி.சிவறமணன்

வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி, வவுனியா.


உங்கள் கருத்துக்களுக்கு...........

www.ramanansiva15@gmail.com
www.ramanansiva15.blogspot.com



செயல் நிலை ஆய்வுச் செயற்பாடுகள்

முற்சோதனை மேற்கொள்ளப்பட்டமை - 06.06.2013










தலையிடல் 01 மேற்கொள்ளப்பட்டமை - 14.06.2013

தரம் 06 மாணவர்களுக்கு இடப்பெறுமானம் தொடர்பான அடிப்படை அறிவை விருத்தி செய்தல்.

படிமுறை 01: 

100 இலும் குறைந்த எண்களை எண்சட்டத்தில் வகை குறிக்க பயிற்சியளித்தல்



3 comments: