Posts

Showing posts from September, 2025

புதிய கல்விச் சீர்திருத்தம் - 2025

இலக்கு  21 ஆம் நூற்றாண்டின் மற்றும் அதற்குப் பிந்திய சவால்களுக்குத் தயாராக இருக்கும் ஒரு குடிமகனை உருவாக்குவதற்கான அடித்தளத்தை அமைப்பது, மற்றும் நிலையான தேசிய வளர்ச்சி மற்றும் நாட்டின்அமைதிக்கான செயற்பாட்டிற்குப் பங்களிப்புச் செய்தல். நோக்கங்கள் ❖ பாடத்திட்ட பொருத்தத்தையும் தரத்தையும் மேம்படுத்துதல். ❖ கற்றல் விளைவுகளை மேம்படுத்துதல். ❖ அறிவு மற்றும் தொழில்நுட்ப பிரிவுகளின் சேர்க்கையை அதிகரித்தல.; ❖ நிலைபேண் விருத்தி இலக்குகள் மற்றும்  (SDGs) மற்றும் குடியியல்                கல்வியை உயர்த்துதல். ❖ 21 ஆம் நூற்றாண்டின் திறன்களை வளர்த்தல். ❖ தரத்தையும் மற்றும் உலகமயமாதலையும் உறுதி செய்தல். ❖ பாடசாலையுடனான சமூக தொடர்புகளை உறுதிப்படுத்தல். ❖ தேசிய கல்வி இலக்குகளுடன் (NEGs) ஒத்துப்போதல். ❖ வேலை உலகுக்குத் தயார்படுத்துதல். கல்வி  சீர்த்திருத்தங்கள் 01. பாடத்திட்ட அபிவிருத்தி 02. மனித வள மேம்பாடு 03. உட்கட்டமைப்பு வசதிகளும் கல்வி நிர்வாக சீர்திருத்தங்களின் மேம்பாடு 04. கணிப்பீடு மற்றும் மதிப்பீடு 05. மக்களுக்கு தெளி...

இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய 2000 ரூபா தாள் நாணயம்

Image
இலங்கை மத்திய வங்கி (CBSL) தனது 75வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இன்று புழக்கத்தில் விடப்பட்ட ரூ. 2000 மதிப்புள்ள நினைவு நாணயத் தாளை வெளியிட்டது. இந்த நாணயத் தாளானது, தேசிய வளர்ச்சிக்கான அடித்தளமாக பொருளாதார ஸ்திரத்தன்மையை வளர்ப்பதற்கான மத்திய வங்கியின் நீடித்த அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும் வகையில், "செழிப்புக்கான ஸ்திரத்தன்மை" என்ற ஆண்டு விழா கருப்பொருளுக்கு ஏற்ப அமைந்துள்ளது. இது CBSL ஆல் வெளியிடப்பட்ட 5வது நினைவு நாணயத் தாளாகும். இன்று முன்னதாக, இந்த நினைவு நாணயத் தாளானது, ஜனாதிபதி செயலகத்தில், மத்திய வங்கியின் ஆளுநர் டாக்டர் பி. நந்தலால் வீரசிங்க அவர்களால் கௌரவ ஜனாதிபதி மற்றும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் அனுர குமார திசாநாயக்க அவர்களிடம் அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டது.